மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது – அசாம் முதல்வர்

Manipur riots

மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது என்று அசாம் முதல்வர் பேட்டி. 

மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அத்தொடர்ந்து  சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல படுகாயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூரில் தொடர் வன்முறை காரணமாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகின்றனர். இதனால், பிரேன் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியான நிலையில், இந்த முக்கியமான தருணத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அசாம் முதல்வர், ஹிமந்தா பிஸ்வஸ் மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது என்றும், மணிப்பூரில் அமைதி நிலைநாட்டப்பட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்