வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு – 4ம் தேதி 8 பேரும் ஆஜராக உத்தரவு!
வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேரும் 4-ஆம் தேதி ஆஜராக உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டில் மனித கழிவு கலைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். எதற்காக டிஎன்ஏ சோதனை என விசாரணை அதிகாரி, நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் உடன்பாடு இல்லை என 8 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அறிவியல் பூர்வமான நிரூபணத்திற்கு டிஎன்ஏ பரிசோதனை அவசியம் என்று விசாரணை அதிகாரி விளக்கமளித்தார். இதனைத்தொடர்ந்து வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் 8 பேரும் 4-ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. வேங்கைவயல் வழக்கை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்.
8 பேருக்கும் சிபிசிஐடி போலீஸ் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள, தாக்கல் செய்த மனுவின் நகல் நேற்று வழங்கப்பட்டது. சிபிசிஐடியின் மனு நகலை படித்து பார்த்து ஆட்சேபனை இருந்தால், இன்று பிற்பகல் 2 மணிக்கு தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை செய்துகொள்ள 8 பேரும் மறுப்பு தெரிவித்ததாக வழங்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து, டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான வழக்கில் வரும் 4-ஆம் தேதி 8 பேரையும் ஆஜர்படுத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.