மக்களாட்சிக்கு இடையூறு! ஆளுநர் ரவி அவர்களே சிறிது நேரம் அமைதி காக்கவும் – கனிமொழி எம்பி
நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு இருக்கும் ஆளுநர் சிறிது நேரம் அமைதி காக்கவும் என கனிமொழி ட்வீட்.
மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியை கனிமொழி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்றுள்ளார்.
வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை. தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை. நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.