பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 50,000 ரூபாய்.! பிரதமர் மோடி அறிவிப்பு.!
பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி டெல்லி விழாவில் கூறினார்.
இன்று டெல்லியில் 17வது இந்திய கூட்டுறவு காங்கிரஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அப்போது விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் இது மோடியின் உத்தரவாதம் என்றும் கூறினார் . கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகத்தினர் பழைய தொகையை செலுத்த சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அந்த விழாவில் கூறினார்.
PM Pranam எனும் ஒரு பெரிய திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. திட்டத்தின் கீழ் ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். இதனால் மண் வளம் காப்பது மட்டுமின்றி, விவசாய செலவும் குறையும். இதில் கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் அந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.