அண்ணாமலை தலைமையில் ஜூலை 4ம் தேதி ஆலோசனை கூட்டம்.!
அண்ணாமலை தலைமையில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் வரும் 4ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு.
மாநிலம் முழுவதும் ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். ராமேஸ்வரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கும் இந்த பாதயாத்திரையை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதனையொட்டி, அண்ணாமலை தலைமையில் ஜூலை 4ம் தேதி சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன், கே.பி. ராமலிங்கம், உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ற்னர்.