இந்தியா தலைமையில் நடக்கும் எஸ்சிஓ மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பதாக அறிவிப்பு!

Shehbaz Sharif

ஜூலை 4ல் இந்தியா தலைமையில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பதாக அறிவிப்பு.

ஜூலை 4ல் இந்தியா தலைமையில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு, ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்ற அமைப்பை உருவாக்கின.

இதன்பின், கடந்த 2017 ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த அமைப்பில், நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன. சுழற்சி முறையில் இந்த அமைப்பின் மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு இந்த ஆண்டு கிடைத்துள்ளது. அதன்படி, 23வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியா தலைமையில் ஜூலை 4ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஜூலை 4ல் இந்தியா தலைமையில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்பார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில்,  ஜூலை 4ம் தேதி நடைபெறும் SCO அமைப்பின் 23வது கூட்டத்தில் பிரதமர் முஹம்மது ஷெபாஸ் ஷெரீப் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்பார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தற்போது, தலைமைப் பதவியில் உள்ள இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். எனவே, இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என்றுள்ளனர். இந்த மாநாட்டில் உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் எதிர்காலம் குறித்து பேசப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்று உரை ஆற்றுவார் எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்