தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்பு..!
தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தின் தலைமை செயலாளராக பொறுப்பில் இருக்கும் இறையன்புவின் பதவிக்காலம் இன்று முடிவடைந்த நிலையில், புதிய தலைமை செயலாளராக நகராட்சி துறை கூடுதல் செயலாளராக பொறுப்பில் இருக்கும் சிவதாஸ் மீனா தமிழகத்தின் 49வது புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இராஜஸ்தானை சேர்ந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ் முடித்து காஞ்சிபுரத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக அரசு பொறுப்பை துவங்கினார். அதன் பிறகு பல்வேறு மத்திய, மாநில அரசு பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார்.
அவரது பொறுப்பில் இருந்த நகராட்சி துறை செயலாளர் பதவி கார்த்திகேயன் ஐஏஎஸ் அவர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், பொதுத்துறை செயலாளராக நந்தகுமாரும், டிஎன்பிஎஸ்சி தலைவராக டிஜிபி சைலேந்திரபாபு நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.