#BREAKING: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் – முதலமைச்சர் திட்டவட்டம்!
செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி எழுதிய கடிதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்.
செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என குறிப்பிட்டு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் முதலமைச்சர். இந்த பதில் கடிதத்தில், அரசியலமைப்பு சட்டப்படி, அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உரிமை எனவும் விளக்கியுள்ளார்.