தூத்துக்குடியில் இரங்கல் கூட்டம் மற்றும் அமைதிப் பேரணி நடத்த டி.ஜி.பி.யிடம் மனு அளித்தார் திருமாவளவன்..!
தூத்துக்குடியில் வரும் 18ஆம் தேதி இரங்கல் கூட்டம் மற்றும் அமைதிப் பேரணி நடத்த அனுமதி கோரி, தமிழக டி.ஜி.பி.யிடம் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
மேலும், வேல்முருகன் மீதான தேசத்துரோக வழக்கு, நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து கைது செய்யப்படுதல், மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் டி.ஜி.பி.யிடம் அவர் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், கூட்டம் நடத்த அனுமதி வழங்காவிட்டால், நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.