ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி..! மலேசியாவை வீழ்த்தி இந்திய இணை சாம்பியன்..!

Asian Squash

ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியானது, சீனாவில் உள்ள ஹுவாங்சோவில் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கால், ஹரிந்தர்பால் சிங் ஜோடி மலேசியாவின் சியாபிக் கமால் மற்றும் ஐஃபா அஸ்மான் ஜோடியை வீழ்த்தியது.

மற்றொரு அரையிறுதியில் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட், இவான் யுவன் ஜோடி இந்திய அணி சார்பில் விளையாடிய இரண்டாவது அணியை வென்றது. இதனால் இந்தியாவின் அனாஹத் சிங் மற்றும் அபய் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை பெற்றது.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் தீபிகா பல்லிக்கால், ஹரிந்தர்பால் சிங் ஜோடி மற்றும் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட், இவான் யுவன் ஜோடி இன்று மோதியது. இதில் தரநிலையில் 2 வது இடத்தில் உள்ள மலேசியா அணியை இந்திய அணி 11-10, 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

இதன்மூலம் இந்திய இணை முதல் ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிக்கால் மற்றும் ஹரிந்தர்பால் ஆகிய இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்