கேவலம் அந்த விஷயத்துக்காக…கணவரை வேறு அறையில் தூங்க வைக்கும் ஹன்சிகா.!

Hansika Motwani

18 வயசுல இருந்தே ஹேண்ட் பேக்குகள் மீது தீரா ஆசை உண்டு, இதற்காக தனது கணவரை வேறு ஒரு அறையில் தூங்க வைத்ததாக தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஹன்சிகா, சமீபத்தில் தனது தொழில் நண்பராக இருந்து காதலரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், லைவ் போரட்ல் ஒன்றில் ஹன்சிகா, ஒரு அதிர்ச்சியான காரணத்திற்காக தனது கணவரை அடிக்கடி வேறு அறையில் தூங்க வைப்பதாக பகிர்ந்து கொண்டார். அதற்கு தனது விலையுயர்ந்த ‘ஹேண்ட் பேக்’ தான் காரணம் என்று வெளிப்படுத்தினார்.

Hansika Motwani HANDBAGS
Hansika Motwani HANDBAGS [Image source : Pixaby]

இது குறித்து அவர் பேசுகையில், எனக்கு 18 வயசுல இருந்தே ஹேண்ட் பேக்குகள் மீது தீரா ஆசை உண்டு. அதிலும், லூயிஸ் உய்ட்டன் ப்ராண்ட் ஹேண்ட் பேக்கின் விலை ரூ.1லட்சம், அது தான் எனது முதல் ஹேண்ட் பேக். எங்க போனாலும் அதை எடுத்துட்டு போவேன், அம்மாவுக்கும் அண்ணனுக்கும் அதன் மீது ஆர்வம் இல்லை ஆனால் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகளை வாங்குவது வீணாகாது, அதை நான் ஒரு முதலீடாகவே பார்க்கிறேன் என்று கூறுகிறார்.

Hansika Motwani HANDBAGS
Hansika Motwani HANDBAGS [The Hindu]

மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய அனைத்து ஹேண்ட் பேக்குகளும் ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கும். கடந்த ஆண்டு நான் பாரிஸ் சென்றபோது வாங்கிய கெல்லி பேக் தான் தற்போது எனக்கு பிடித்த ஹேண்ட் பேக். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இதையெல்லாம் வாங்குகிறேன். நான் மீண்டும் பாரிஸ் செல்கிறேன்…. அதனால் மீண்டும் ஹேண்ட் பேக்கை வாங்க திட்டமிட்டுள்ளேன்.

Hansika Motwani
Hansika Motwani [Image Source : Reuters]

சில நேரங்களில், எனது கணவர் சோஹேலுடன் இரவு உணவிற்கு வெளியே சென்றால் எங்க இரண்டு பேருக்கு மட்டும் இல்லமால், மூன்று பேருக்கு டேபிள் புக் செய்வேன். எப்பொழுதும் ஹேண்ட் பேக்கை கவனமாக ஒரு நாற்காலியில் வைத்திருப்பேன். அவ்வளவு பொக்கிஷமாக தனது ஹேண்ட் பேக்கை பார்த்துக்கொள்வேன். நான் மும்பையிலிருந்து ஒரு நாள் வெளியே செல்லும்போது, என் படுக்கையில் ஹேண்ட் பேக்குகள் நிறைந்திருந்தது. அதனால், எனது படுக்கையில் தூங்காமல் என் கணவர் வேறு அறையில் படுக்க விரும்புவதாக கூறினார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்