மிரட்டல் அவதாரத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் லுக்.! வைரலாகும் போஸ்டர்…
தனுஷின் நடிப்பில் வெளிவரிருக்கும் பீரியட் ஆக்ஷன் படமான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் மிகப்பெரிய ஹைப்பைக் கொண்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கேப்டன் மில்ல படத்தில் நடிக்கும் தனுஷின் மிரட்டல் போஸ்டர்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த போஸ்டர்கள் தனுஷின் ரசிகர்கள் வடிமைத்தது தெரிய வந்துள்ளது. ஆனால், அத போஸ்டர்களில் தனுஷ் மிரட்டல் அவதாரத்தில் தோற்றமளிக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல மியூசிக் லேபிள் சரேகமா ஆடம்பரமான விலைக்கு கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஆனால், டீசர் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில், ஷிவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் மற்றும் ஆர்ஆர்ஆர் புகழ் எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.