இபிஎஸ் தலைமையில் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூலை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 5ம் தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.