பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்..! காவலர்களுக்கு சைலேந்திர பாபு கடிதம்…!
ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு அவர்கள் காவலர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு அவர்கள் ஒய்வு பெற்றுள்ளார். தற்போது தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். இந்த நிலையில், ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு அவர்கள் காவலர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்; துறை நமக்கு செய்ததை போன்று, துறைக்கு நாம், கைமாறு செய்ய வேண்டும்; பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.
பொதுமக்கள் மனதில் இடம்பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்; குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, உண்மை தன்மையை கண்டறிந்து திருத்தி கொள்ளவேண்டும். இரண்டாண்டு காலம் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம்.
தவறாக ஒருவரையும் குற்றவாளியாக்கவில்லை; குற்றம் செய்த யாரையும் விடவில்லை. தமிழ்நாட்டில் சாதிச் சண்டை, மதக் கலவரம், இரயில் கொள்ளை, வங்கிக் கொள்ளை இல்லை. காவலர்கள் பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும் உடல்நலம், மனநலம் காக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.