தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக பதவியேற்றார் சங்கர் ஜிவால்..!
தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் இன்றுடன் ஒய்வு பெரும் நிலையில, தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், சைலேந்திரபாபு அவர்களும், புதிய டிஜிபியாக பதவியேற்கும் சங்கர் ஜிவால் அவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிலையில், தற்போது தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். பொறுப்புகளை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தற்போது புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.