செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதை திமுகவின் நாடகம் மாற்றாது! – அண்ணாமலை

BJP State President Annamalai

திரு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதை திமுகவின் நாடகம் மாற்றாது என அண்ணாமலை ட்வீட்.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட திரு செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் குழுவில் இருந்து தமிழக ஆளுநரால் டிஸ்மிஸ் செய்தது குறித்து பாஜக தமிழ்நாடு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது.

தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். 2018 ஆம் ஆண்டில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரினார். அன்றும் இன்றும் என்ன மாறிவிட்டது? திரு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதை திமுகவின் நாடகம் மாற்றாது! என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்