தொடர் வன்முறை: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா?

Biren Singh

மணிப்பூரில் தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 2 மாதங்களாக அங்கு  வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதுவரை மணிப்பூர் கலவரத்தில் 133 பேர் உயிரிழந்ததாகவும், 3000க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கலவரங்களால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சமயத்தில், கடந்த 2 நாட்களாக அமைதி நிலவி வந்த மணிப்பூரில், நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது.

நேற்று, கங்போக்பி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், தலைநகர் இம்பாலில் பாஜக அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இம்பாலில் உள்ள மருத்துவமனை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மத்திய,  அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும், மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசியாவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்