வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதியில் தங்குமிடம் வழங்க தமிழக அரசு உத்தரவு.
வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுதி அல்லது விடுதியின் வளாகத்திலோ அல்லது வளாகத்தின் 250 மீட்டர் சுற்றளவிலோ தங்குமிடம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க வேண்டும் என்று இன்று ஓய்வு பெரும் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதிய நிலையில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.