இன்னும் இரண்டாம் பாகமே வரல…அதற்குள் உருவாகிறதா இந்தியன்-3.? உதயநிதி கொடுத்த அப்டேட்.!

indian 2

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் இன்னும் முடிவுற்று திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்குள் இந்தியன் 3 குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Indian 2 shooting
Indian 2 shooting [Image Source :file image]

அதாவது, இந்தியன் படத்தின் 3வது பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என உதயநிதி புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து மாமன்னன் ப்ரோமோஷன் பணியின் போது, இந்தியன்-2 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அவர் பேசுகையில், முதலில் இந்தியன் 2 ரிலீஸாகட்டும் தற்போது cG காட்சிகளுக்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியன் 3 பற்றி அடுத்து முடிவு செய்யப்படும்.

indian
indian [Image- Scroll.in]

மேலும், இது குறித்த அறிவிப்பு நேரம் பார்த்து வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னும் 20 முதல் 25 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 2024ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு, சிஜி வேலைகள் நடந்து வருகின்றன என்றார்.

Indian2 - kamal
Indian2 – kamal[Image Source :
Twitter/file image]

இந்தியன் 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு இதுவரை 90 % முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக மீதமுள்ள படப்பிடிப்பு தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், மனோபாலா, விவேக், சமுத்திரக்கனி மற்றும் பலர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்