சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு!
செந்தில் பாலாஜி விவகாரத்தில் சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்கிறோம் என வழக்கறிஞர் இளங்கோ தகவல்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.என்.இளங்கோ பங்கேற்றிருந்தனர். செந்தில் பாலாஜி விகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கப்பட்டு, பின்னர் உத்தரவு நிறுத்தி வைத்தது ஏன்? என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், ஆளுநரை விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மூத்த வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், செந்தில் பாலாஜி விவகாரத்தில் சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்றார்.