ரூ.20-க்கு குறைவான சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை..!

cigarette lighters

ரூ.20 ரூபாய்க்கு கீழ் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இதுவரை இலவசமாக இருந்த ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிப்பில் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக் கொள்கை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை இறக்குமதி இலவசம் என்ற கொள்கை மாற்றியமைக்கப்பட்டு, ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு லைட்டரின் சிஐஎஃப் (CIF) மதிப்பு ரூ.20 அல்லது அதற்கு மேல் இருந்தால் இறக்குமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஐஎஃப் மதிப்பு என்பது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மொத்த மதிப்பைத் தீர்மானிக்க சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வர்த்தகச் சொல்லாகும். மேலும், பாக்கெட் லைட்டர்கள், எரிவாயு எரிபொருள்,பாக்கெட் லைட்டர்கள், எரிவாயு எரிபொருள், நிரப்ப முடியாதது அல்லது நிரப்பக்கூடிய லைட்டர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2022 செப்டம்பரில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்