தனது அதிகாரம் பற்றி தெரியாத ஆளுநர் ரவி.! குடியரசு தலைவருக்கு கோரிக்கை வைத்த காங்கிரஸ் எம்பி.!

Manish Tiwari Congress MP

தனது அதிகாரம் பற்றி தெரியாத ஆளுநர் ரவியை குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி கோரிக்கை வைத்துள்ளார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவல் கட்டுப்பாட்டில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டார். பின்னர் சில காரணங்களால், ஆளுநர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் . அதில் தனது அதிகாரம் என்னவென்றே தெரியாமல் இருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என குடியரசு தலைவருக்கு கோரிக்கை வைத்தும். அரசியலமைப்பு சட்டம் குறித்தும் தனது அதிகாரம் குறித்தும் சரியான புரிதல் இல்லாமல் ஆளுனர் ரவி செயல்பட்டு வருகிறார் என்றும் அதில் காங்கிரஸ் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்