ஆளுநர் விவகாரம் – முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது!
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவுகள் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் ஏன்? உத்தரவு நிறுத்தி வைப்பது ஏன்? என்பது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்என் ரவி நேற்று திடீரென அறிவித்திருந்தார். ஆளுநரின் அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு, ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், ஆளுநர் விவகாரம், செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். செந்தில் பாலாஜி விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது