பிரதமர் மோடி சிறந்த நண்பர்.! மேக் இன் இந்தியா சிறந்த திட்டம்.! ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்.!
பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்றும் மேக் இன் இந்தியா திட்டம் சிறந்த திட்டம் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அண்மையில் மாஸ்கோவில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுக்கையில், பிரதமர் நரேந்திர மோடி பற்றி பாராட்டி பேசியுள்ளார். மேலும், மேக் இன் இந்தியா திட்டம் குறித்தும் தனது உரையில் பாராட்டி கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
அவர் கூறுகையில், ரஷ்யாவின் உள்நாட்டு தயாரிப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் வேண்டும் எனவும் இதற்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம் என பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவில் உள்ள ரஷ்யாவின் நண்பர்களும், எங்களது பெரிய நண்பருமான பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டுகளுக்கு முன்பு மேக் இந்தியா திட்டத்தை தொடங்கிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மேக் இன் இந்தியா திட்டமானது இந்திய பொருளாதாரத்தில் உண்மையிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், அங்கு இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும் அதனை நாம் பின்பற்றுவது நமக்கு எந்த வித தீங்கையும் விளைவிக்காது என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேக் இன் இந்தியா திட்டம் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் குறிப்பிட்டு பேசியுள்ளார்