ஆளுநர் விவகாரம் : சட்ட வல்லுனர்கள்.. மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.!

Tamilnadu CM MK Stalin

ஆளுநர் விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுனர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

அமலாக்கத்துறையிலானரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அறிவிப்பை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்து இருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து ஆளுநர் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான தலைமை செயலக சட்ட அலுவல் பணிகள் முடிந்தவுடன் இந்த ஆலோசனை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே, ஆளுநர் விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்