ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் எனக்கு பயம்.. முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ்!

Kapil Dev

ஹர்திக் பாண்டியாவைக் கண்டு “எப்போதும் பயம்” என்று இந்திய வீரர்களின் காயங்கள் குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கருத்து.

இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 8ம் தேதி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் பொடியை எதிர்கொள்கிறது. பின்னர் ஒரு வாரத்திற்குப் பிறகு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது இந்திய அணி.

மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை என்ற கடைசியாக வென்றது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியாத சூழல் உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை 50 ஓவர் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளது இந்தியா.

இந்த நிலையில், 1983- இல் உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ், இந்தியாவில் நடைபெற உள்ள 2023 உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் முழுமையான உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2023 உலகக் கோப்பை முன்னதாக இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து பேசிய கபில் தேவ், 2011 ஆம் ஆண்டில், வங்காளதேசம் மற்றும் இலங்கையுடன் இணைந்து இந்தியா நடத்திய ஒருநாள் உலகக் கோப்பையையும் தோனியின் தலைமையில் வென்றது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மார்க்யூ போட்டிக்கு முன்னதாக இந்திய அணி காயம் பிரச்சினைகளை எதிர்கொண்டது. இதில் குறிப்பாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 9 மாதங்களுக்கும் மேலாக ஆக்ஷனில் இருந்து விலகி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் கே.எல் ராகுல் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் முக்கிய மிடில்-ஆர்டர் பேட்டர்கள், ஆனால் அவர்களும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் கடுமையான சாலை விபத்திற்குப் பிறகு குணமடைந்து வருவதால், இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இந்த சமயத்தில், இந்திய அணிக்கு முக்கியமான வீரரான ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்த அச்சுறுத்தலை எடுக்காட்டியுள்ளார் கபில் தேவ். அவர் கூறுகையில், கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் ஹர்திக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்து, இறுதியில் இந்தியாவின் ஒயிட்-பால் அணிகளில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். இந்த ஆண்டு, டி20 போட்டிகளிலும் அவர் இந்தியாவை வழிநடத்தினார். இருப்பினும், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அவரது பந்துவீச்சில் தயக்கம் காட்டினார்.

50 ஓவர் போட்டி ஒருபுறம் இருக்க, T20I களில் கூட ஹர்திக் பாண்டியா தனது முழு ஈடுபாட்டை கொடுக்க முடியவில்லை, ஏனெனில் அவரது காயம் தான் அதற்கு காரணம். இதனால், ஹர்திக் பாண்டியாவுக்கு நான் எப்போதும் பயப்படுவேன், ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைவார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் காயங்கள் ஒரு பகுதியாகும். இந்த நிலைமை சீராகும் என நம்புகிறேன். இந்த வீரர்கள் அனைவரும் உடற்தகுதி நன்றாக இருந்தால், இந்தியா ஒரு சிறந்த அணியாக மாற முடியும் என்றார்.

மேலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உலகக் கோப்பை வருகிறது, எனவே நீங்கள் தயாராக இருக்க வேண்டும். போட்டி பயிற்சி தேவை, அதிகளவில் ஒருநாள் போட்டிகள் தேவை. எனவே, டெஸ்ட் மற்றும் டி20களை சிறிது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் என்று பிரபல ஓடக்காது பேட்டியளித்த கபில் தேவிடம் இந்திய அணியில் காயம் பிரச்சினைகள் குறித்து கேட்டபோது இவ்வாறு கூறினார்.

ஹர்திக் பாண்டியா 2019-இல் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார், மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து பந்து வீசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கரீபியனில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஹர்திக் அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இந்தியாவை வழிநடத்தினார், அப்போது ரோஹித் ஷர்மா சொந்த வேலை காரணமாக விளையாட்டைத் தவிர்த்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்