உங்களுக்காக கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்… ரசிகருக்கு கைஃப் அளித்த பதில் .!

KAIF

உங்களை அணியிலிருந்து நீக்கிய பின் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை என்ற ரசிகரின் டிவீட்டுக்கு முகமது கைஃப் பதில் ட்வீட் செய்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தான் தற்போது கிரிக்கெட் பார்ப்பதில்லை அதற்கு காரணம் உங்களை இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கியது தான் என முகமது கைஃப்க்கு ட்வீட் செய்துள்ளார். இந்திய அணியில் ஒரு காலத்தில் மிகச்சிறந்த பீல்டர் என்றால் அவர்களில் முகமது கைஃப் ஒருவர். கடந்த 2000இல் இந்திய அணிக்காக அறிமுகமான கைஃப் 6 வருடம் மட்டுமே அணியில் விளையாடினார்.

முகமது கைஃபின் ரசிகரான ஆரிப் ராசா என்பவர் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கைஃப் அவரது கடைசி போட்டியில் 91 ரன்கள் குவித்திருந்தும் அவரை நீக்கிய பிறகு தான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என ட்வீட் செய்திருந்தார். இதற்கு கைஃப் அவருக்கு பதில் ட்வீட் செய்துள்ளார்.

கைஃப் தனது டிவீட்டில் ஆரிப், கிரிக்கெட் என்ற விளையாட்டை விட கிரிக்கெட் வீரர்கள் நாங்கள் பெரியவர்கள் இல்லை, இந்தியாவில் இந்தவருடம் உலகக்கோப்பை நடக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு இல்லை. அதனால் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஈடுபாடு கொண்டு இந்தியாவுக்கு ஆதரவு தாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்