தமிழகத்தில் ரெப்கோ வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்… ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்…

REPCO Micro Finance

தமிழகத்தில் ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் முதல் சீனியர் மேலாளர் வரையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் கீழ் செயல்படும் ரெப்கோ வங்கியில் உதவி அலுவலர் முதல் சீனியர் மேனஜர் வரையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 28-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • முதுநிலை மேலாளர் – 10 காலிப்பணியிடங்கள்.
  • மேலாளர் – 10 காலிப்பணியிடங்கள்.
  • துணை மேலாளர் 35 காலிப்பணியிடங்கள்.
  • உதவி மேலாளர் – 35 காலிப்பணியிடங்கள்.
  • நிர்வாக உதவியாளர் – 50 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

  • முதுநிலை மேலாளர் – ஏதேனும் ஒரு டிகிரி + 7 வருட வங்கி அனுபவம்.
  • மேலாளர் – ஏதேனும் ஒரு டிகிரி + 5 வருட வங்கி அனுபவம்.
  • துணை மேலாளர் – ஏதேனும் ஒரு டிகிரி + 3 வருட வங்கி அனுபவம்.
  • உதவி மேலாளர் – ஏதேனும் ஒரு டிகிரி + 1 வருட வங்கி (ஏதேனும் ஒரு நிதிப்பிரிவில்) அனுபவம்.
  • நிர்வாக உதவியாளர் – ஏதேனும் ஒரு டிகிரி.

சம்பளம் விவரம் (ஆண்டு  அடிப்படையில்) :

  • முதுநிலை மேலாளர் – 8 லட்சம்.
  • மேலாளர் – 6.5 லட்சம்.
  • துணை மேலாளர் – 5 லட்சம்.
  • உதவி மேலாளர் – 4.5 லட்சம்.
  • நிர்வாக உதவியாளர் – 3.5 லட்சம்.

வயது வரம்பு (அதிகபட்சம்) : 

  • முதுநிலை மேலாளர் – 35 வயது.
  • மேலாளர் – 35 வயது.
  • துணை மேலாளர் – 30 வயது.
  • உதவி மேலாளர் – 28 வயது.
  • நிர்வாக உதவியாளர் – 28 வயது.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 28 ஜூன் 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 19 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் – ரூ.500/- (அனைவருக்கும்)

விண்ணப்பிக்கும் முறை : 

  • ரெப்கோ வங்கியின் அதிகாரபூர்வ தளமான rmflcareers.mentheeapps.comக்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, குறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன் இறுதி நகலை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்
  • பின்னர் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi