உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நடிக்க வேண்டும்.. மாமன்னன் மிக பெரிய வெற்றி பெரும்.! அமைச்சர் ரகுபதி பேட்டி.!
உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் மாமன்னன் மிக பெரிய வெற்றி பெரும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் எனும் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பலரும் பார்த்து தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திரையரங்கிற்கு நேரடியாக சென்று மாமன்னன் படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் உடன் கண்டுகளித்தார். படம் முடிந்து அவர் பேசுகையில், அமைச்சராக இருந்து கொண்டு, திரைப்படங்களில் நடிக்க கூடாது என்ற சட்டம் கிடையாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது என ஆசை என தெரிவித்தார்.
மேலும், மாமன்னன்’ கடைசி படம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாமன்னன் திரைப்படம் பல தடைகள் தாண்டி மிக பெரிய வெற்றி பெறும் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.