மாமன்னனை பார்த்து கட்டித்தழுவிய முதல்வருக்கு நன்றி… மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி.!

Mariselvaraj tweet

இன்று வெளியான மாமன்னன் திரைப்படத்தை பார்த்து வாழ்த்திய முதல்வருக்கு நன்றி என மாரிசெல்வராஜ் ட்வீட்.

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், அமைச்சரும் நடிகருமான உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான மாமன்னன் இன்று முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த மாமன்னன் திரைப்படத்தை பார்த்து விட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியதாக மாரிசெல்வராஜ் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாரிசெல்வராஜ் பதிவிட்ட டிவீட்டில், மாமன்னனை பார்த்து விட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை கட்டித்தழுவிக் கொண்டாடினார் என்றும், வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு பெரும் மரியாதை கலந்த நன்றியையும், எங்களது அன்பையும் சமர்ப்பிக்கிறோம் என ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்