கடல் வழி பாதுகாப்பு ஒத்திகை ‘சாகர் கவாச்’ தொடக்கம்.! பழவேற்காடு முதல் தென்கோடி நீரோடி வரை…
கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் கடல் வழியாக தமிழ்நாட்டில் ஊடுருவதை தடுப்பது போன்று கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க நடத்தப்படும் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
தமிழ்நாட்டின் பழவேற்காடு கடற்பகுதியில் இருந்து தென்கோடி கடற்பகுதியான நீரோடி வரை இந்த ஒத்திகை கடலோர காவல்படையினரால் நடத்தப்படுகிறது. அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 48 மீனவ கிராமங்களின் கடலோர பகுதிகளின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் இருந்து கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினருடன் போலீஸ் இணைந்து ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ஆண்டு தோறும் சாகர் கவாச் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..