ஆசிய கபடி சாம்பியன்ஷிப் : தொடர் வெற்றிகளை பதித்து வரும் இந்தியா.! நேற்று ஜப்பானை வீழ்த்தியது.!
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தியது.
இந்தியா, ஜப்பான், ஈரான், சைனீஸ் தைபே, தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 முறை நடந்து முடிந்துள்ள இந்த தொடரில் 7 முறை முறை தங்க பதக்கம் வென்ற அணியாக இந்தியா கம்பீரமாக இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதல் நாளிலேயே இரண்டு வெற்றிகளை இந்தியா பெற்றிருந்தது. முதல் போட்டியில் தென்கொரியாவை இந்தியா 76 – 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தியது. அடுத்ததாக சைனீஸ் தைபே அணியுடன் இந்திய கபாடி அணி மீது மோதியது. இதில் 53 -19 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை பதித்தது.
இதனை தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொண்டது. ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 62 – 17 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானில் எளிதில் வீழ்த்தியது.
தொடர்ந்து விளையாடிய மூன்று போட்டியிலும் வெற்றியை பதித்ததால் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஈரான், ஜப்பான், சைனீஸ் தைபே , தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன.