கரும்பு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.315 வழங்க அமைச்சரவை ஒப்புதல்..!
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.315 வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு 315 ரூபாய்க்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது இதுவரை இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பார். அமைச்சரவை அளித்த இந்த ஒப்புதலால் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ளவர்கள், சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்களுக்கும் பயனடைவார்கள்.
மேலும், 2013-14ல், குவிண்டால் ரூ.210 ஆகவும், மொத்த கொள்முதல் விலை ரூ.97,104 கோடியாகவும் இருந்தது. இது பாஜக ஆட்சியில் ரூ.1,13,000 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், 2014-23ம் ஆண்டில் மொத்த கொள்முதல் ரூ.7,86,066 கோடியாக உள்ளது என்றும் அனுராக் தாக்கூர் கூறினார்.