தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி..! தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மோதல்..!
தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மோதும் தேசிய மகளிர் கால்பந்து இறுதிப் போட்டி தொடங்கியுள்ளது.
கடந்த 26ம் தேதி (திங்கள்கிழமை) அமிர்தசரஸில் நடைபெற்ற சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் அரையிறுதியில் நான்கு முறை இறுதிப் போட்டிக்கு வந்த ரயில்வே அணியை தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இதன்பின் நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஒடிசா மற்றும் ஹரியானா அணிகள் மோதியது. இதில் இரு அணிகளும் ஒரு கோல் அடிக்க, பெனால்டி மூலம் ஹரியானா அணி 2 கோல்கள் அடித்தது. இதனால் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்கொள்ள ஹரியானா தகுதி பெற்றது.
தற்பொழுது, அமிர்தசரஸில் உள்ள குருநானக் ஸ்டேடியத்தில் தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் மோதும் இறுதிப்போட்டியானது தொடங்கியுள்ளது. இந்த சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை இந்திய கால்பந்து (IndianFootball) யூடியூப் சேனலில் நேரடியாக காணலாம்.