அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு… சென்னை முதன்மை அமர்வு நீதிபதி.!
நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையிலிருந்து காணொளி மூலம் ஆஜர்.
காவேரி மருத்துவமனையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொளி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிகின்ற நிலையில், அவர் இன்று நீதிபதி அல்லி முன்பு காணொளிக்காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, மேலும் 14 நாட்கள் வரை அதாவது ஜூலை 12 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.