27 ரயில் நிலையங்கள்.. 5 கி.மீ சுரங்கபாதைகள்… நீளும் மதுரை மெட்ரோ திட்டப்பணிகள்.! விளக்கம் கொடுத்த திட்ட இயக்குனர்.!

Madurai Metro

மதுரை மெட்ரோ திட்டப்பணிகளில் மற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதன் திட்ட இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். 

மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் மெட்ரோ ரயில் பணிகள் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வகுத்த திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மதுரை மெட்ரோ திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதில், மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் 30 கிமீ என வகுக்கப்பட்ட பாதை தற்போது 32 கிமீ ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கிமீ பாதை சுரங்கபாதையாக வகுக்கப்பட்டுள்ளது. மொத்தம்  18 ரயில் நிலையங்களாக இருந்தது, 27 ரயில் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. மதுரை ஜங்க்சன் ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் சேர்ந்து ஒரு மெட்ரோ ரயில் நிலையமாகவும்,கோரிப்பாளையம் , மீனாட்சி அம்மன் கோவில் என மொத்தம் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் சுரங்கபாதையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அதன் பிறகு இந்த திட்ட பணிகள் முழுதாக தயாரிக்கப்பட்டு அவை வரும்  ஜூலை 15ஆம் தேதி அன்று தமிழக அரசுக்கு வழங்கபட உள்ளது . அதன் பிறகு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும், பின்னர், அதற்கான நிதி திரட்டப்பட்டு அதற்கு பிறகு மதுரை மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பிக்கப்படும் என திட்ட இயக்குனர் தெரிவித்தார். மேலும், மெட்ரோ சுரங்கபாதைகள் வைகை ஆற்றங்கரை கிழே 10 மீ ஆழத்தில் தான் அமைக்கப்பட உள்ளன. வைகை ஆற்றங்கரை கீழே பாறை தான் இருப்பதால் அதில் எதுவும் பிரச்னை இல்லை எனவும் மெட்ரோ திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Yashasvi Jaiswal
Encounter tn
rohit sharma about mi
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal