அதிர்ச்சி : ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை…!
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் விஷ அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
தமிழகத்தில் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் விஷ அருந்தி தற்கொலை செய்துள்ளார். தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த இளைஞர் மாரி செல்வம் ஆன்லைன் ரம்மியால் சுமார் பத்து லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் மணமடைந்த அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.