ஊராட்சி மன்ற தேர்தல் தோல்வி.. பழிக்கு பழி.! நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை.! 10 பேர் உடனடி கைது.! 

Murder

கடலூர் மாவட்டத்தில் மீனவர் மதியழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் தாழங்குடா கிராமத்தை சேர்ந்த மதியழகன் நேற்று மஞ்சக்குப்பம் பகுதி சிவன் கோவிலில் குடும்பத்துடன் வந்தவரை 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட துரத்தி நடு ரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்தது.மேலும், அந்த கொலைகார கும்பல் அவரது முகத்தை சிதைத்து, அரிவாளை அங்கேயே விட்டு சென்றது.

வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதியழகன் மனைவி  சாந்தி கடலூர் தாழங்குடா ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி மனைவி தோல்வி அடைந்துள்ளனர்.

மேலும், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் மதியழகன் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் சகோதரரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் மதியழகன் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு நடைபெற்று வருவதால் வெளியில் இருந்த மதியழகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி அவரது தரப்பை சேர்ந்த பிரகலாதன், தினேஷ், அறிவு, பாரதி, ராமானுஜம், விஜய், சஞ்சய்குமார், குருநாதன், ராஜேந்திரன், ராமலிங்கம், முத்து, மைக்கேல், பாலமுருகன், மணிகண்டன், தேவேந்திரன், சந்திரவாணன், சரவணன், அர்ஜூனன், ராஜவேல், ராஜேஷ், அந்தோணிசெல்வம், ஆகாஷ், பிரகாஷ் மனைவி வச்சலா ஆகிய 24 பேர் திட்டமிட்டு மதியழகனை வெட்டிக்கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். எல்லை பகுதிகளில் தீவிர சோதனையில் காவலர்கள் ஈடுப்பட்ட வந்த நிலையில்,  விழுப்புரம் மாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற 10 பேரை தனிப்படை போலீசார் கடலூர்-விழுப்புரம் மாவட்ட எல்லையில் மடக்கி பிடித்தனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை, குற்றவாளிகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்