மணிப்பூர் கலவரம்… பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கிய முதல்வர்.!

Manipur violence aid

மணிப்பூர் மாநில வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி முதல்வர் பிரேன் சிங் வழங்கினார்.

மணிப்பூரில் மெய்ட்டேய் சமூகத்துக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டேய் மற்றும் குக்கி சமூக மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் பெரிய வன்முறை வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தால் ஏராளமானோர் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

மேலும் அரசும், பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தி மக்களை தங்க வைத்தனர். இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், மணிப்பூரில் லாம்பலில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதையடுத்து முதல்வர் பிரேன் சிங், பாதுகாப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கும், இடம்பெயர்ந்தவர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்