மாமன்னனுக்கு தடை…அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உய்ரநீதிமன்ற நீதிபதி கருத்து
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “மாமன்னன்” படத்துக்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நாளை வெளியாக உள்ள ‘மாமன்னன்’ படத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அமைச்சராக இந்திய இறையாண்மையின் படி சத்தியப்பிரமாணம் செய்துள்ள அமைச்சர் உதயநிதிஸ்டாலின், ஒரு சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் நடித்துள்ளார் என்றும், இப்படம் வெளிவந்தால் இரு சமூகத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வழக்கில் குறிப்பிடப்படுள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், சாதிய வன்முறையை தூண்டுவதாக ‘மாமன்னன்’ படத்திற்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, திரைப்படத்திற்கு தணிக்கை துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது, திரைப்படம் மக்கள் பார்க்கவே இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள், பேச்சுரிமை, கருத்துரிமை அனைவருக்கும் உள்ளது என நீதிபதிகள் தரப்பில் குறிப்பிட்டு அவசர வழக்காக மாமன்னன் தடை வழக்கை விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.