தைவான் கிழக்கு கடற்கரையில் 2 ரஷ்ய போர்க்கப்பல்..! பாதுகாப்பு அமைச்சகம் தகவல்..!
தைவான் கிழக்கு கடற்கரையில் 2 ரஷ்ய போர்க்கப்பல்களை கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவானின் கிழக்குக் கடற்கரையில் இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்களைக் கண்டறிந்துள்ளதாக, அதன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக வெளியான அறிக்கையில் இரண்டு போர் கப்பல்களும் தைவானின் கிழக்கு கடற்கரையிலிருந்து வடக்கு திசையில் பயணித்ததாக கூறப்படுகிறது.
பிறகு, அந்த கப்பல்கள் தென்கிழக்கு திசையில் தைவானின் முக்கிய கடற்படை தளமான சுவாவோ துறைமுக நகரத்திலிருந்து புறப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்பின் தைவானின் இராணுவம் விமானம் மற்றும் கப்பல்களை கண்காணிப்பதற்காக அனுப்பியதைவானின் இராணுவம் விமானம் மற்றும் கப்பல்களை கண்காணிப்பதற்காக அனுப்பியதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம், ரஷ்ய பசிபிக் கடற்படையின் கப்பல்கள் நீண்ட தூர கடல் பயணத்தின் ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸ் கடலின் தெற்குப் பகுதிகளுக்குள் நுழைந்ததாக தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.