உக்ரைன் பீட்சா உணவகத்தில் ரஷ்யா தாக்குதல்…8 பேர் உயிரிழப்பு.!
கிழக்கு உக்ரேனிய நகரமான கிராமடோர்ஸ்க் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள பீட்சா உணவகம் மீது நேற்றிரவு ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா இரண்டு S-300 வகை ஏவுகணைகளை ஏவியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சிறு குழந்தை உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றும் உள்ளதாக உக்ரைன் உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நபர்களை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.