ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்..!
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மீது தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மீது வாராகி என்பவர் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர் வாராகி கடந்த மே மாதம் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையிட ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மதுரை ஆணையராக இருந்தபோது நடந்த போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்து வாராகி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.