தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வருமானவரித்துறை சோதனை நிறைவு.!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தலைமை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதால் வங்கி ஊழியர்கள் தவிர வேறு யாரும் வங்கியினுள் அனுபாதிக்கப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையானது இரவு முழுவதும் தொடர்ந்து நிறைவு பெற்றுள்ளது.
இதற்கிடையில், வங்கி நிர்வாகத்தினர், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்தனர்.