விஜய் ஆண்டனிக்கும் தயாரிப்பாளருக்கும் அல்வா கொடுத்த நடிகை ஆத்மிகா.!
நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி, கோடியில் ஒருவர், கண்ணே நம்பாதே ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள்ளார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.
சினிமாவில் ஒரு படம் எடுக்கும்போது, நடிகர்களும் நடிகைகளும் கடைசி நேரங்களிலும் படப்பிடிப்பு தளத்திலும் ஏதாவது செய்து குளறுபடி உண்டாக்குவது வழக்கம். சில நேரங்களில் நடிகர்கள் வேறொரு படங்களை செல்வதும் ஷூட்டிங் நடக்கும்போது, வராமல் இருப்பதும் உண்டு.
அதே நடிகைகள் என்றால், இந்த கடையில் தான் சாப்பிட வேண்டும்…..இந்த ஹோட்டலில் ரூம் போடுங்க….இந்த உடைகள் தான் வேண்டும் என ஆடம்பரமாக கேட்பது வழக்கம். அந்த வகையில், இப்போது நடிகை ஆத்மிகா ஒரு புதுவித ட்ரெண்டை உருவாக்கியுள்ளார். அதாவது விஜய் ஆண்டனி நடிக்கும் புது படத்திற்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகிவிட்டு, அதற்கான தேதிகளையும் கொடுத்துவிட்டு நடிக்கிறேன் என சொல்லிட்டு தீடிரென ரூட்டை மாத்தியுள்ளார்.
அட ஆமாங்க…. ஷூட்டிங் தொடங்கும் நாளன்று என்னால் முடியவில்லை எனது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. என்று கூறி படத்தில் இருந்து விலகியுள்ளார். ஆனால், அவர் கொடுத்த அதே தேதியில் வேறொரு படம் சூட்டிங்கிற்கு தனது அவரது அம்மாவுடன் சென்று நடித்தாராம்…இந்த தகவல் விஜய் ஆண்டனி மற்றும் அதன் தயரிப்பாளருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.