செந்தில் பாலாஜி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணை நடந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
நாளைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய இரு இருதரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இரு நாட்களாக 8 மணி நேரத்திற்கு மேலாக வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதத்தை நிறைவு செய்தார்.