எச்சரிக்கை! மாமன்னன் படத்தை திரையிட்டால்…தாக்குதல் நடத்தப்படும்.!

Maamannan

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

MaamannanTrailer
MaamannanTrailer [Image Source : Twitter/@RedGiantMovies_]

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வடிவேலு அவரது அப்பாவாக மிரட்டி உள்ளார். உதயநிதி ஸ்டாலினினுக்கு இது கடைசி படமாக இருந்தாலும் தரமான சம்பவமாக இந்த திரைப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.

Maamannan
Maamannan [Image Source : Galatta]

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்பட ப்ரோமோஷன் பிணியின் போது, தேவர்மகன் திரைப்படத்தை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைத்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Maamannan
Maamannan [Image Source : Twitter/@RedGiantMovies_]

இந்நிலையில், தேனியில் உள்ள வெற்றி திரையரங்கத்தில் மாமன்னன் படம் திரையிடப்பட்டால் திரையரங்கம் மீது தாக்குதல் நடத்தப்படும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Maamannan
Maamannan [Image Source : the hindu]

இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும், இத்திரைப்படம் வரும் ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்