ஆருத்ரா மோசடி வழக்கு: 21 பேர் கைது.. 40 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி தகவல்

ஆருத்ரா மோசடி வழக்கில் 4000 பக்க முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக ஐ.ஜி ஆசியம்மாள் தகவல்.
ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள், ஆருத்ரா மோசடி வழக்கில் 4000 பக்க முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3,500 மோசடி புகார்கள் வந்துள்ளன. 526 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆருத்ரா வழக்கில் 40 பேர் குற்றவாளிகளாக சேர்த்துள்ளோம். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 440 முதலீட்டாளர்களிடம் ரூ.13 கோடிக்கு மோசடி புகார் பெற்றுள்ளோம் என தகவல் தெரிவித்தார். ஹிஜாவு வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹிஜாவு நிறுவன மோசடி தொடர்பாக 89000 புகார்கள் வந்துள்ளன. இதுபோன்று ஐஎஃப்எஸ் நிறுவன வழக்கில் மொத்தம் 132 சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
ஐஎஃப்எஸ் நிறுவன வழக்கில் மோசடி ரூ.32 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐஎஃப்எஸ் நிறுவன மோசடி வழக்கில் ஜானகி ராமன், ஹேமந்த்குமார் ஆகியோரை கைது செய்துள்ளோம். ஏஆர்டி நிறுவன மோசடி வழக்கில் 3 பேரை கைது செய்துள்ளோம். மேலும், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மோசடி வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மீது 1,850 பேர் மோசடி புகார்கள் தெரிவித்துள்ளனர் என ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025