கைதின்போது 2 சாட்சிகள்! குற்றவியல் சட்டப்பிரிவு 41ஏ பொருந்தாது.. மீண்டும் தொடங்கியது அமலாக்கத்துறை வாதம்!

Enforcement Directorate

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அமலாக்கத்துறையின் வாதம் தொடங்கியது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணை நடந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது.. காரணத்தை உடனே கூற அவசியமில்லை.. அமலாக்கத்துறை வாதம்! 

இதன்பின், செந்தில் பாலாஜி வழக்கில், வாதம் நிறைவடையாததால் விசாரணை பிற்பகல் 2:45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. தற்போது மீண்டும் அமலாக்கத்துறை தரப்பில் தங்களது வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை தரப்பு வாதம்:

அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்துள்ள வாதத்தில், செந்தில் பாலாஜி ஆரம்பத்தில் இருந்தே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சம்மன் அனுப்பினாலும் உரிய பதில் இல்லை. விசாரணையின்போது கேட்கின்ற கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. இதனால் தான் கைது நடவடிக்கை தேவைப்பட்டது.

சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திலேயே கைதுக்கு அதிகாரம் உள்ளபோது, குற்றவியல் சட்டப்பிரிவு 41ஏ பொருந்தாது. சட்டப்பிரிவு 41ஏ என்பது கைது செய்யாமல் விசாரணைக்கு அழைப்பது, ஆனால், எங்களுக்கு கைது தேவைப்பட்டது. சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தில் கைது செய்யும்முன் கைதுக்கு காரணம் தேவை, ஆதாரம் வேண்டும்.

குற்ற விசாரணை முறை சட்டம், சட்ட விரோத பண மாற்ற தடை சட்ட வழக்குகளுக்கு பொருந்தாது. சட்ட விரோத பணமாற்ற சட்டம் என்பது சிறப்பு சட்டம். பிஎம்எல்ஏ சட்ட பிரிவு 90-ன் படி கைதுக்கான காரணங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. கைதின்போது 2 சாட்சிகள் இருந்தனர்.

உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது, குறுஞ்செய்தி மாற்றும் மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியை நீதிபதி ரிமாண்ட் செய்யும் போது காரணங்கள் தெரிவிக்கப்பட்டது, அப்போது அவரது வழக்கறிஞர் உடனிருந்தார் என தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்