டிஎன்பிஎல் தொடரின் அதிவேக அரைசதம்..! சாய் கிஷோர் அசத்தல் சாதனை..!
திருப்பூர் அணி வீரர் சாய் கிஷோர், டிஎன்பிஎல் தொடரின் அதிவேக அரைசதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெறுகிற நிலையில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி அணிகள் மோதிய 17வது போட்டியில், திருப்பூர் அணியின் வீரர் சாய் கிஷோர், 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்து, டிஎன்பிஎல் தொடரின் அதிவேக அரைசதத்தை அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
Sai kishore-ன் மறுபக்கம்!????
Fastest fifty of Shriram Capital TNPL2023#TNPL2023????#idttvsbt#TNPLonstarsports#TNPLonfancode#NammaAatamAarambam????#NammaOoruNammaGethu???????? pic.twitter.com/Luafq1KScu— TNPL (@TNPremierLeague) June 26, 2023
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய திருப்பூர் அணியின் வீரர்கள் அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்தனர். இதில் சாய் கிஷோர் மற்றும் பால்சந்தர் அனிருத் அரைசதம் அடித்து அசத்தினர்.
அதன்பின், 202 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி வீரர்கள் இறுதிவரை போராடியும் வெற்றி இலக்கை எட்ட முடியாமல், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் அதிகபட்சமாக பெராரியோ 42 ரன்களும், ஜாபர் ஜமால் 30 ரன்களும், ஆண்டனி தாஸ் 25 ரன்களும் குவித்துள்ளனர். திருப்பூர் தமிழன்ஸ் அணியில் புவனேஸ்வரன் தனது அட்டகாசமான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.